தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பொய் சாட்சி சொல்ல நிர்ப்பந்தம் தாக்கிய பழங்குற்றவாளி கைது

பொய் சாட்சி சொல்ல நிர்ப்பந்தம் தாக்கிய பழங்குற்றவாளி கைது

பொய் சாட்சி சொல்ல நிர்ப்பந்தம் தாக்கிய பழங்குற்றவாளி கைது


ADDED : ஏப் 27, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோட்டை சேர்ந்தவர் யுவராஜ், 38, தறி பட்டறை தொழிலாளி. இவரது நண்பரின் மகளிடம் ஈரோடு கொத்துகாரர் தோட்டத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி தமிழ் செல்வன், 30, தவறாக நடக்க முயன்றதாக, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் கடந்தாண்டு புகார் செய்யப்பட்டது.

இதன் மீது வழக்குப்பதிந்த போலீசார், நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் யுவராஜ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிைலயில் யுவராஜை, தமிழ்செல்வன் வழிமறித்து நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லுமாறு கூறி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். யுவராஜ் புகாரின்படி தமிழ்செல்வனை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். தமிழ்செல்வன் மீது ஏற்கனவே, 15க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us