ADDED : ஜூன் 21, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அடுக்குபாறை கண்ணையன் தோட்டத்தை சேர்ந்தவர் பிரதாப், 38; தறி
பட்டறை உரிமையாளர். காமதேனு நகர் பூங்கா அருகில் விவசாயம்
செய்கிறார்.
தோட்டத்தில் வைத்திருந்த மின் மோட்டாரின், 200 மீட்டர்
ஒயர் திருட்டு போனது. அதன் மதிப்பு, 12 ஆயிரம் ரூபாய். புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இது
தொடர்பாக ஈரோடு சூளை சந்தோஷ்குமார், 24; வீரப்பன்சத்திரம்
மாணிக்கம்பாளையம் கலையரசன், 18; பெரியசேமூர் கல்லான்கரடு
விக்னேஷ், 27, என மூவரை கைது செய்து, ஒயரை பறிமுதல் செய்தனர். மூவரும்
பழங்குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
