ADDED : செப் 13, 2024 06:39 AM
ஈரோடு: ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு, வணிக சங்கங்களின் பேரமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் வேலா சுந்தரராஜன் தலைமையில், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் முன்னிலையில் நிர்வாகிகள், அஞ்சலி செலுத்தினர்.
சென்னிமலையில்...
வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னிமலையில் அனைத்து வணிகர் சங்கம் சார்பாக நேற்று கடையடைப்பு நடந்தது. இதன்படி காலை, ௬:௦௦ம மணி முதல், மாலை, ௪:௩௦ மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. சென்னிமலை குமரன் சதுக்கத்தில் இறுதி அஞ்சலி கூட்டம் நடந்தது.இவற்றில் சென்னிமலை அனைத்து வணிகர் சங்கம், ஒன்றிய மளிகை வணிகர் சங்கம், ஜவுளி ரெடிமேட் கடை உரிமையாளர் சங்கம், எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் கடை உரிமையாளர்கள் சங்கம், செல்போன் கடை உரிமையாளர் சங்கம், காலனி விற்பனையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.