/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை
/
திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை
ADDED : ஆக 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், கோவை மண்டல இளைஞரணி சார்பில், 'நமது இலக்கை நோக்கி' என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.
இதில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார். கார்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணததால் வரும், 30ல் திருச்சியில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் மாநில அளவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.