/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் முப்பெரும் விழா
/
மாற்றுத்திறனாளிகள் முப்பெரும் விழா
ADDED : ஆக 11, 2025 08:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, சிறப்பாக சேவை புரிந்த மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் விழா, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. நலச்சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். நல திட்டங்களை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மகிழுந்து, டூவீலர் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்க வேண்டும். மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வசதியுடன் விளையாட்டு உட்புற, வெளிப்புற விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் அமைத்து வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் தேர்வில், தலைவராக துரைராஜ், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக நவநீத கிருஷ்ணன் மற்றும் 24 நிர்வாக குழு உறுப்பினர், 34 செயற்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.

