இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட த.வெ.க., செங்கோட்டையன்
இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட த.வெ.க., செங்கோட்டையன்
ADDED : ஏப் 11, 2026 11:11 PM
ஈரோடு: த.வெ.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, அ.தி.மு.க.,வில் இருந்த செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், விஜயின் த.வெ.க.,வில் இணைந்தார். அக்கட்சியின் மாநில நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், தற்போது கோபிச்செட்டி பாளையம் தொகுதியில், த.வெ.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கே.வி.பாளையம், எஸ்.ஆர். டி., கார்னர் உள்ளிட்ட பகுதிகளில், த.வெ.க., வேட்பாளர் தமிழ் செல்வியை ஆதரித்து, செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு கூறினார்.
அ.தி.மு.க., சின்னத்தை கூறி, செங்கோட்டையன் ஓட்டு கேட்டதால், த.வெ.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், 'நீண்ட காலமாக அந்த கட்சியில் இருந்ததால், பழக்க தோஷத்தில் வந்து விட்டது' என கூறி சமாளித்தார்.
