ADDED : மார் 30, 2026 05:28 AM

பெயர் : செங்கோட்டையன்
வயது : 78
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.,
ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர்
தொழில் : விவசாயம், அரசியல்
குடும்பம் : மனைவி, ஒரு மகன்
அரசியல்
அனுபவம் : கடந்த, 1972ல், அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர். 1977ல்
சத்தி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. பிறகு, 1980, 84, 89, 91,
2006, 2011, 2016, 2021 என கோபி தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை
வெற்றி. அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் மற்றும் போக்குவரத்து,
வனத்துறை, வேளாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம், வருவாய்த்துறை,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த, 2025ல்,
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க., கட்சியில் இணைந்தார்.
தற்போது அக்கட்சி நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
கிடைத்தது
எப்படி: முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா
அமைச்சரவையில் இருந்தது, பழுத்த அனுபவசாலி, அரசியல் அனுபவத்தில்
சீனியர் என்பதுடன், த.வெ.க., தலைவர் விஜய்யின் நம்பிக்கையை பெற்றதால்
வாய்ப்பு கிடைத்துள்ளது.
