ADDED : ஜூன் 10, 2026 02:41 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை
அடுத்த புங்கம்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 29; பவானிசாகர்
தெற்கு ஒன்றிய செயலாளர்.
இவர் கடந்த, 7ம் தேதி இரவுபுளியம்பட்டி -
சத்தி சாலையில் டூவீலர்ல் சென்றார். நல்லுார் இரட்டைப்பாலம்
மாதேஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் வந்ததால்
நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்தகாயமடைந்தார்.
மேல்
சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வன் நேற்று காலை
இறந்தார். இவர் கடந்த மாதம், 29ம் தேதி, நல்லுார் பஞ்சாயத்து
அலுவலகத்துக்கு கட்சியினருடன் சென்று, மக்கள் குறைகளுக்கு உரிய
தீர்வு காணும்படி, தனி அலுவலரிடம் வலியுறுத்தினார்.
இந்த செயல்
விதிமீறல் என்றும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் விபத்தில் சிக்கி
இறந்து விட்டது, அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
