/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்கன்வாடி போராட்டத்துக்கு த.வெ.க., ஆதரவு: அரசியல் பேசக்கூடாதென நிர்வாகிகள் எதிர்ப்பு
/
அங்கன்வாடி போராட்டத்துக்கு த.வெ.க., ஆதரவு: அரசியல் பேசக்கூடாதென நிர்வாகிகள் எதிர்ப்பு
அங்கன்வாடி போராட்டத்துக்கு த.வெ.க., ஆதரவு: அரசியல் பேசக்கூடாதென நிர்வாகிகள் எதிர்ப்பு
அங்கன்வாடி போராட்டத்துக்கு த.வெ.க., ஆதரவு: அரசியல் பேசக்கூடாதென நிர்வாகிகள் எதிர்ப்பு
UPDATED : பிப் 12, 2026 05:38 AM
ADDED : பிப் 12, 2026 04:31 AM

ஈரோடு: ஈரோட்டில், அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய போராட்டத்-துக்கு, த.வெ,க.,வினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்க வந்தனர். கட்சியினர் அரசியல் பேசக்கூடாது என, நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு காளை மாடு சிலை அருகே, தமிழ்நாடு சத்துணவு, அங்-கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று, 8 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தனுஷ்-கோடி தலைமை வகித்தார். மாநில தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலர் பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் வெங்கிடு ஆகியோர் பேசினர்.மாநில அளவில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்துக்கு இடையே, த.வெ.க., மாவட்ட செயலர் பாலாஜி மற்றும், 50க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து பங்-கேற்க வந்தனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி உள்ளிட்ட சிலர், ''நாங்கள் அரசியல் சார்பின்றி, அரசு ஊழியர்களாக போரா-டுகிறோம். இங்கு அரசியல் பேசுவதில்லை. எங்கள் கோரிக்-கையை மட்டுமே பேசுகிறோம். நீங்கள் பேசும்போது, அரசியல் பேசினால், தேவையற்ற பிரச்னை எழும். வேண்டுமானால் சிறிது நேரம் எங்களுடன் அமர்ந்துவிட்டு செல்லுங்கள் அல்லது எங்கள் கோரிக்கை பற்றி மட்டும் பேசுங்கள்,'' என்றார்.
நிர்வாகி மணிமேகலை, ''இங்கு கட்சி சார்பில் யாரும் பேச வேண்டாம். எங்கள் கோரிக்கை, உங்கள் உணர்வுகளை அறிக்கை-யாக மட்டும் வெளியிடுங்கள்,'' என, எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே போலீசார் வந்து, இன்ஸ்பெக்டர் பேசுகிறார் என, பாலாஜியிடம் போனை கொடுத்தனர். போனில் பேசிய இன்ஸ்பெக்டர் வைரம், ''அங்கு கட்சி
யினர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை. பணியாளர்களின் தர்ணாவுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யக்கூடாது,'' என கூறினார்.
பின், மாவட்ட செயலர் பாலாஜி பேசியதாவது: உங்கள் கோரிக்-கைகளை கேட்டறிய வந்துள்ளோம். எங்கள் தலைவரிடம் தெரி-வித்து அறிக்கை விட செய்கிறோம். கடந்த, 8, 10 ஆண்டுகளாக காத்திருந்தீர்கள். இன்னும், 2 மாதங்கள் பொறுத்திருங்கள். ஆட்சி மாற்றம் வந்து, விஜய் தலைமையில் ஆட்சி அமைந்ததும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம். எங்களது கட்சி தேர்தல் அறிக்கையில், உங்கள் கோரிக்கைக்கான தீர்வையும் தலைவரிடம் கூறி வெளியிட செய்கிறோம். இவ்வாறு பேசினார்.

