/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
/
தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : அக் 30, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,   ஆசனுார் அருகே தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் -டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு, சத்தியமங்கலம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. ஆசனுார் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் தேங்காய்கள் சாலையில் சிதறின. அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள், போட்டி போட்டு தேங்காய்களை அள்ளி சென்றனர்.

