ADDED : ஆக 21, 2026 05:41 AM
பெருந்துறை:சேலம்
மாவட்டம் வாழப்பாடி, சென்றாயன்பாளையம், கிழக்குகாட்டை சேர்ந்தவர்
பாண்டியரசன், 33; லாரி டிரைவர். திருமணமான மூன்றாண்டில் கருத்து
வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார். பிறகு வேறு ஒருவரை
திருமணம் செய்து கொண்டார். இதனிடையே பாண்டியரசன் சாலை விபத்தில்
சிக்கி, இரண்டாண்டுகளாக சிகிச்சையில் இருந்தார். இதனால் ஏற்பட்ட
மருத்துவ செலவால் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனாலும் மீண்டும் டிரைவர்
பணிக்கு திரும்பினார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட்
ஏற்றிக்கொண்டு பெருந்துறை அருகே நேற்று முன்தினம் இரவு வந்தார்.
பெருந்துறை ஆசிரியர் காலனி பாலம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு,
நண்பர் சுரேஷ், அண்ணன் மகன் பழனிச்சாமிக்கு வாட்ஸ் ஆப்பில் தற்கொலை
செய்து கொள்ளப்போகிறேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால்
அதிர்ச்டி அடைந்த இருவரும், அவரை மொபைல்போனில் அழைத்தபோது
ஏற்கவில்லை. பாண்டியரசன் அனுப்பிய லொகேஷனுக்கு வந்தனர். நைலான்
கயிற்றால் சாலையோர மரத்தில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
