/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 28, 2024 02:34 AM
ஈரோடு: சிவகிரி அருகே, கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்-துக்கு உட்பட்ட பெரிய செம்மாண்டம்பாளையம், கருங்காடு பகு-தியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.
காசநோய் பரவல், நுரையீரல் காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரி-சோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், தொழுநோய் பரவல், ஆரம்ப அறிகுறி, சிகிச்சையால் தவிர்க்கப்-படும் அங்கஹீனம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மணிவண்ணன், வட்டார மேற்பார்வையாளர் மகாலிங்கம், பால-குமார், தங்கவேல் உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள், 125க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவ-ருக்கும் காசநோய், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை, தொழுநோய்க்கான பரிசோ-தனை மேற்கொள்ளப்பட்டது.

