/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தோடு சொசைட்டியில் சனி தோறும் மஞ்சள் ஏலம்
/
சித்தோடு சொசைட்டியில் சனி தோறும் மஞ்சள் ஏலம்
ADDED : பிப் 10, 2026 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அடுத்த சித்தோடு (கன்னிமார்காடு - நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே ) ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வரும், 14ம் தேதி சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை, 11:00 மணிக்கு மஞ்சள் ஏல விற்பனை நடக்க உள்ளது.3
விவசாயிகள் இங்கு மஞ்சள் மூட்டைகளை இருப்பு வைக்க மற்றும் விற்பனை செய்ய தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் கொண்டு வந்து, விற்பனை கூடத்தில் பதிவு செய்ய வேண்டும். இங்கு, 2,000 டன் அளவு கிடங்குகள், 60 டன் அளவுள்ள எடை மேடை வசதிகள் உள்ளதாக, ஈரோடு விற்பனை குழு வேளாண் துணை இயக்குனர் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.

