ADDED : பிப் 09, 2026 08:16 AM

அ நிறம் | அளவு
நம்பியூர்: நம்பியூர் மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்டம், மகா தரிசன விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்து முடிந்தது.
விழா நிறைவாக மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது. உற்சவர் முருகன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
