ADDED : மே 29, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு ;மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம், கண்ணன் காட்டுமேட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 49; ஈரோடு அசோகபுரத்தில் 'டிவி' மெக்கானிக் கடை வைத்திருந்தார்.
கணபதிபாளையம் அருகே உள்ள மன்னதாம்பாளையம் பச்சியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, அங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
விருந்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்தார். ஜீரணம் ஆகாததால் அன்றிரவு, 8:30 மணிக்கு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்துள்ளார். சிறிது குடித்தவுடன் வாந்தி எடுத்தவர் மயக்கமானார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
