ADDED : ஆக 13, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோனிதேவி, 40; சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரில் தங்கி, தனியார் டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஐந்து மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஒரு தம்பதி, ௧௩ வயதான தங்களின் இரட்டை பெண் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை. இருவரையும் அழைத்து செல் என்று கூறியதால், சிறுமியரை அழைத்து வந்தார். நேற்று முன்தினம் அருகிலுள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிறுமிகள் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சோனிதேவி, சித்தோடு போலீசில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.