/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புகையிலை பொருட்கள் விற்பனை; இருவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்பனை; இருவர் கைது
ADDED : டிச 12, 2024 01:37 AM
ஈரோடு, டிச. 12-
ஈரோடு, பழைய பூந்துறை சாலையில் உள்ள கடையில், டவுன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைக்குள் தமிழக அரசால் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட கூல் லீப் மூன்று, ஹான்ஸ், 22, விமல் பான் மசாலா, 10, வி1 புகையிலை, 10 என மொத்தம், 45 பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கச்சேரி வீதி சேட்டு மகன் ஷாஜகான், 32, மீது
வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதே போல், மொடக்குறிச்சி அருகே வெப்பிலியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஹான்ஸ், 10 பாக்கெட் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளரான வெப்பிலி ஆனந்தம்பாளையம் விஜய ராகவன், 65, மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

