/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1.6 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு 'காப்பு'
/
1.6 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு 'காப்பு'
ADDED : அக் 11, 2025 12:37 AM
ஈரோடு, மலையம்பாளையம் போலீசார் ரேஷன் கடத்திய இருவரை கைது செய்து ௧.௬ டன் ரேசன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், பறக்கும் படை தாசில்தார் மற்றும் போலீசார், ஈரோடு மலையம்பாளையம் அருகே கண்ணுடையாம்
பாளையம் புதுார் பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு ஆம்னி வேனில், 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
இது தொடர்பாக மாதம்பட்டை சேர்ந்த காளிமுத்து, 35, விஜய், 29, மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வட மாநிலத்தவர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரிந்தது.