/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல்போன் திருடிய இரண்டு பேர் கைது
/
மொபைல்போன் திருடிய இரண்டு பேர் கைது
ADDED : செப் 18, 2025 01:39 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அடுத்த கோவில் புதுார் பகுதியில், மில் நுாற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், நுாற்பாலை வளாகம் அருகே தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 14ம் தேதி வழக்கம்போல தொழிலாளர்கள் மொபைல் போன்களை, தங்கி இருந்த அறைகளில் வைத்து விட்டு வேலைக்கு சென்றனர்.
அப்போது அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் மொபைல்போன்களை திருடி சென்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், புன்செய் புளியம்பட்டி போலீசார், மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளை நிற பல்சர் பைக்கில் வந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். அவர்கள் குரும்பபாளையத்தை சேர்ந்த கோகுல், 21, பவானிசாகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 19, என்பது தெரியவந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, வட மாநில தொழிலாளர்களிடம் மொபைல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இரண்டு மொபைல்போன், திருட்டிற்கு பயன்படுத்திய பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பைக்கில் வந்த மற்றொரு சிறுவனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.