ADDED : டிச 15, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒயர் திருடிய இருவர் கைது
டி.என்.பாளையம், டிச. 15--
டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் நரசபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர். கே.என்.பாளையம்--டி.ஜி.புதுார் ரோட்டில் ஸ்ரீவேலன் நகரில் வீடு கட்டி வருகிறார். வீட்டில் ஒயரிங் செய்வதற்காக, 60,000 ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர் வாங்கி வைத்திருந்தார். இது கடந்த, ௧௨ம் தேதி இரவு திருட்டு போனது. அவர் புகாரின்படி விசாரித்த பங்களாபுதுார் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஒயரை திருடிய, டி.ஜி.புதுார் அருகேயுள்ள அத்தியப்ப கவுண்டன் புதுார் கோவிந்தராஜ், 25, ஆனந்த், 33, ஆகியோரை கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.