ADDED : மே 01, 2026 05:26 AM
கோபி:கோபி அருகே பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராணி. 43; கார்மென்ட்ஸ் நிறுவன தொழிலாளி. கணவர் இறந்ததால், 15, 17 வயது மகள்களுடன் வசித்தார். கடந்த ஏப்.,25ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகள்களின் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே புஷ்பராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
புஷ்பராணி மொபைல்போனுக்கு அதிக முறை பேசியிருந்த கவுந்தப்பாடியை சேர்ந்த மகேந்திரன், 32, என்பவரை பிடித்து விசாரித்தனர். புஷ்பராணி வேலை செய்த அதே நிறுவனத்தில் அவரும் வேலை செய்தது தெரிந்தது. நெருங்கி பழகிய நிலையில் புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனை தனிமையில் இருக்க அழைக்க அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து மனைவியிடம் கூறி விடுவதாக புஷ்பராணி மிரட்டியதால், மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். உறவினரான சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்த சதீஷுடன், 36, சேர்ந்து கொலை செய்து, ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் சடலத்தை வீசியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்திய காரையும்
பறிமுதல் செய்தனர்.
