/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது
/
லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது
ADDED : ஜன 07, 2024 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, ராமபையலுாரை சேர்ந்தவர் அருள் பாரதி. தன் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெற, சிக்கரசம்பாளையம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்தார்.
போர்மேன் சண்முகம், லைன்மேன் பாலசுப்ரமணியன் ஆகியோர், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். தர விரும்பாத அருள்பாரதி, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் அறிவுரைப்படி, இருவரிடமும் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.