குட்கா விற்ற இரண்டு கடைகள் மூடல்; ரூ.2 லட்சம் அபராதம்
குட்கா விற்ற இரண்டு கடைகள் மூடல்; ரூ.2 லட்சம் அபராதம்
ADDED : அக் 09, 2026 04:19 AM
ஈரோடு:அம்மாபேட்டை
வட்டாரத்தில் வெள்ளித்திருப்பூர் சாலை, ஒலகடம் டவுன் பஞ்.,
பகுதியில், பள்ளி அருகே உள்ள கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு
நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர்,
வெள்ளித்திருப்பூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு நடத்தினர்.
இதில்
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், கூல் லிப், ஹான்ஸ்
உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை உறுதி செய்தனர். முருகன்
என்பவரின் மளிகைகடை, விஜயன் என்பவரின் மளிகை கடையில், புகையிலை
பொருட்களை கைப்பற்றினர். போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில்
இரு கடைகளும் மூடப்பட்டன.
கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமங்கள்
ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இரு
கடைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு
பாதுகாப்பு அலுவலர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு
குபேர்குமார் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
