தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இளைஞரை பீர்பாட்டிலால் தாக்கிய இருவருக்கு காப்பு

இளைஞரை பீர்பாட்டிலால் தாக்கிய இருவருக்கு காப்பு

இளைஞரை பீர்பாட்டிலால் தாக்கிய இருவருக்கு காப்பு


ADDED : ஆக 28, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மூலப்பாளையம் ஜீவா நகர் ஏழுமலை மகன் கவுதம். இவரது சகோதரர் ரோஷன் கடந்த, 2 மாதத்துக்கு முன் போதை மாத்திரை விற்பதாக போலீசில், சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கந்தசாமி மகன் வைரவேல், 22, ரகுபதி நாயக்கன்பாளையம் ரெயின்போ கார்டன் சந்திரசேகரன் மகன் பிரதாப், 22, ஆகியோர் மீது புகார் கூறினார்.

அந்த கோபத்தில் இருந்த வைரவேல், பிரதாப் ஆகியோர் கடந்த, 25ல் ரோஷனை பார்க்க வேண்டும் என்று கூறி, கவுதமை ரயில்வேகாலனி மைதானத்துக்கு அழைத்து சென்று பீர் பாட்டிலால் அடித்தனர். பின்னர் அவரை வீட்டின் அருகே விட்டு சென்றனர். இதில் கவுதமிற்கு காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்த கவுதம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து வைரவேல், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தீபக், நவீன் ஆகியோரை தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us