ADDED : மே 17, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், சாவடிபாளையம் ஸ்டேஷன் இடையே தண்டவாள பகுதியில், வாலிபர் சடலம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 25 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
இதேபோல் தொட்டிபாளையம்-பெருந்துறை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதி இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ல்ஜாஜுல் ஹக், 46, என தெரிந்தது.
