/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது
ADDED : டிச 18, 2024 01:25 AM
பவானி, டிச. 18-
அம்மாபேட்டை அருகே, பட்லுார் காளிப்பட்டியை சேர்ந்த பிரேமலதா, 52, குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளராக பணிகிறார். கடந்த, 9ம் தேதி, ஸ்கூட்டியில் குருவரெட்டியூரிலிருந்து வெள்ளித்திருப்பூர் செல்ல, குரும்பபாளையம் மன்னாதீஸ்வரர் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர்கள் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த வழக்கில், ஏற்கனவே, கார்த்திகேயன், 38; ஜெகதீஸ்குமார், 29; ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வழிப்பறியில் தொடர்புடையவர்களை வெள்ளித்திருப்பூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று துாத்துக்குடி மாவட்டம், மாங்கொட்டாபுரத்தை சேர்ந்த பாண்டி, 30; ராயவேலுார் பெரிய அல்லாபுரத்தை சேர்ந்த குமரன், 41; ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.