ADDED : செப் 28, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின்படி, பவானி அருகே சேர்வராயன்பாளையம் சுடுகாடு பகுதியில், பவானி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு சூதாடிய மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். இதில் சேர்வராயன்பாளையம் சுந்தரவேல், 35, கார்த்திகேயன், 40, ஆகியோர் சிக்கினர். இருவரையும் கைது செய்து, 1,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.