ADDED : ஜன 06, 2024 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிங்கிரிபாளையத்தில், கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உண்டியலை உடைத்து, 9,388 ரூபாய் திருடு போனது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த அய்யப்பன், 24, சேது, 25, பரணி, 19, ஆகியோரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்த மேலும் ஒரு திருட்டு வழக்கில், மூவருக்கும் தொடர்பு உள்ளது. இதற்காக, ஈரோடு ஆயுதப்படை போலீசார், கோபி நீதிமன்றத்தில், மூவரையும் நேற்று ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற பணி முடித்து மூன்று கைதிகளையும், அதே வளாகத்தில் மதியம், உணவு சாப்பிட போலீசார் அனுமதித்தனர்.
சாப்பிட்ட பின், கை கழுவ சென்ற அய்யப்பன், சேது, திடீரென தப்பி ஓடினர். அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.