ADDED : ஏப் 25, 2026 12:00 AM

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், பூனைக்கல்மேட்டை சேர்ந்த சின்னதுரை மகன் ஜீவன் பிரசாத், 17; மணிகண்டன் மகன் தேவ், 18. நண்பர்களான இருவரும், அந்தியூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.
பட்லுார் நால்ரோட்டில் இருந்து, கே.டி.எம்., பைக்கில், அந்தியூர் நோக்கி நேற்றிரவு வந்தனர். ஜீவன் பிரசாத் பைக் ஓட்டினார். அண்ணாமடுவு துணை மின்நிலையம் அருகே வந்தபோது, அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை நோக்கி சென்ற லாரி, இவர்கள் பைக் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இவர்களின் பைக்கிற்கு பின்னால் 'யமாஹா எப்.இசட்.,' பைக்கில் வந்த ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பிரேம், 27, மீதும் லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். மாணவர்களின் சடலங்களை கைப்பற்றிய அந்தியூர் போலீசார், பிரேமை, கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
லாரி டிரைவர், சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த அய்யப்பன், 53, என்பவரை தேடுகின்றனர்.
