/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் கோவில் பாதுகாப்பு பணி இரண்டு ஏட்டுகளிடம் விசாரணை
/
போதையில் கோவில் பாதுகாப்பு பணி இரண்டு ஏட்டுகளிடம் விசாரணை
போதையில் கோவில் பாதுகாப்பு பணி இரண்டு ஏட்டுகளிடம் விசாரணை
போதையில் கோவில் பாதுகாப்பு பணி இரண்டு ஏட்டுகளிடம் விசாரணை
ADDED : ஏப் 10, 2025 02:08 AM
ஈரோடு:கோவில் விழா பாதுகாப்புக்கு வந்த, இரு ஏட்டுகள் பணிக்கு டிமிக்கி கொடுத்து, மது போதையில் வந்தது குறித்து, ஈரோடு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்புக்கு கடந்த, 7ல் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த இரு போலீஸ் ஏட்டுகள் சென்றனர்.
அவர்களுக்கு, கோவில் நுழைவு வாயில் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆனால் அதிகாலை, 3:00 மணிக்கு காரில் சீருடையுடன் வாகனம் நிறுத்தும் இடத்துக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய, திருப்பூர் மாவட்ட டி.எஸ்.பி., ஒருவர், பணி விபரங்களை கேட்டுள்ளார். மேலும் இருவரும் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் ஏட்டுகள் இருவரும், டி.எஸ்.பி.,யின் கையை பிடித்து காருக்குள் இழுத்துள்ளனர். காரில் இருந்து சாவியை டி.எஸ்.பி., எடுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரையும் அதிகாலை, 6:00 மணி வரை தன் கண்காணிப்பில் வைத்திருந்த பின், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள செய்தார்.
இருவரும் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இப்பிரச்னை குறித்து, ஈரோடு மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழா பாதுகாப்பு பணிக்கு டிமிக்கி கொடுத்ததுடன், போதையில் வந்த ஏட்டுகளின் செயல்பாடு, மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.