/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது
/
இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது
ADDED : ஏப் 19, 2025 01:53 AM
காங்கேயம்:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பகுதி முருகன் என்பவரது மகன் சேட்டு என்ற சிவா, 27. இவர் தற்போது சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி மூலக்கடையில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாக, இரு சக்கர வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் வாங்குவது போல் சென்று, அதை திருடி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த வாரம் முகநாலில் தனது இருசக்கர வாகனத்தை விற்பதாக செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த சிவா, வாகனத்தை வாங்குவதற்கு காங்கேயம் வந்துள்ளார் பின்பு வாகன உரிமையாளரிடம் வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறி, வாகனத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். வாகன உரிமையாளர் புகார்படி, காங்கேயம் போலீசார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகனம் சென்ற சாலையில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், கையும் களவுமாக சிக்கிய சிவாவை பிடித்து, அவரிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

