தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா விற்ற 3 பேருக்கு காப்பு இரு சக்கர வாகனம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேருக்கு காப்பு இரு சக்கர வாகனம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேருக்கு காப்பு இரு சக்கர வாகனம் பறிமுதல்


ADDED : ஏப் 15, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு அடுத்த 46 புதுாரில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார், அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.

அதில், கொல்லம்பாளையம் ரயில்வே காலனியை சேர்ந்த கோகுல், 25, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும்

தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மறைத்து வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான, 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவில்புதூரில் கஞ்சா விற்ற, குரும்பபாளையத்தை சேர்ந்த கோகுல், 19, நல்லூர் காந்திபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 19, என இருவரையும் கைது செய்த புளியம்பட்டி போலீசார், அவர்களிடம் இருந்த, ரூ.75 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us