ADDED : ஜூலை 29, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்; காங்கேயத்தில் பட்ட பகலில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூ வீலரை மர்ம ஆசாமி திருடி சென்றான்.
காங்கேயம் ம.பொ.சி.வீதி நெய்கடை சந்தை சேர்ந்தவர் கண்ணன், 31; கார் டிரைவர். தனக்கு சொந்தமான ஸ்பிளண்டர் டிரே பைக்கை, வீட்டு வெளியே நிழலில் நேற்று நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. நோட்டமிட்டு வந்த ஒரு இளைஞர், பைக்கை திருடிச்செல்லும் காட்சி, அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேம-ராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காங்கேயம் போலீசில், கண்ணன் புகாரளித்துள்ளார்.
