நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஐக்கிய நாடுகள் சபை, 1945 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது இதில், 196 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அடிப்படை கல்வி, பசியில்லா உலகத்தை உருவாக்குதல் போன்றவற்றுக்கு தீர்வு காண ஐ.நா., முக்கிய மையமாகவும், ஒன்று பட்ட வளர்ச்சியை உருவாக்குதல், உலக அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை தினத்தை முன்னிட்டு, ஐ.நா., கொடிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கந்தசாமி, ஐ.நா., கொடியேற்றி நேற்று மரியாதை செலுத்தினார்.

