தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'காலி பாட்டிலை பெற இயலாது': டாஸ்மாக் பணியாளர் அறிவிப்பு

'காலி பாட்டிலை பெற இயலாது': டாஸ்மாக் பணியாளர் அறிவிப்பு

'காலி பாட்டிலை பெற இயலாது': டாஸ்மாக் பணியாளர் அறிவிப்பு


ADDED : மே 16, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து ஆலோசிக்க வேண்டும். பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மதுவிலக்கு துறைக்கு அமைச்சர், உரிய மேல் அதிகாரியை நியமிக்காமல் கடைகளை மூடியதால், பல சிக்கல் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திரும்ப பெறும் முறையால், பணியாளர்கள் சிரமப்படு

கின்றனர். எனவே வரும், 24ம் தேதி வரை மட்டுமே மதுபாட்டில்களை திரும்ப பெறுவோம். அதன் பின் பெற மாட்டோம். இதுபோன்ற சிக்கல்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என தீர்மானம்

நிறைவேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us