/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அறிவிப்பின்றி வந்த அமைச்சரால் ஜி.ஹெச்.,ல் பரபரப்பு
/
அறிவிப்பின்றி வந்த அமைச்சரால் ஜி.ஹெச்.,ல் பரபரப்பு
அறிவிப்பின்றி வந்த அமைச்சரால் ஜி.ஹெச்.,ல் பரபரப்பு
அறிவிப்பின்றி வந்த அமைச்சரால் ஜி.ஹெச்.,ல் பரபரப்பு
ADDED : பிப் 10, 2024 10:38 AM
தாராபுரம்: எந்த அறிவிப்பும் இல்லாமல், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்த சுகாதார அமைச்சரால், பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் அரசு மருத்துவமனையில், நேற்று மாலை, 4:00 மணியளவில், ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது எந்தவித தகவலும் இல்லாமல், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன், தனது உதவியாளர்களுடன் வந்தார்.
திடீரென அமைச்சரை கண்டவுடன், மருத்துவமனை ஊழியர் முதல் மருத்துவர்கள் வரை, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின் சுதாரித்து, அமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
இதையடுத்து மருத்துவமனை வளாகம், வார்டுகளுக்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், நலம் விசாரித்தார். மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களிடம், மருத்துவமனை பணிகள் குறித்து விசாரித்தார். பின் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்டார்.