ADDED : ஏப் 23, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 62. ஈரோடு
அரசு மருத்துவமனை கழிவறையில் கடந்த, 3ம் தேதி காலை மூச்சுவிட
முடியாமல், சிரமப்பட்டு கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை
பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக
தெரிவித்தனர்.
இறந்த முருகேசன் பாக்கெட்டில் ஆதார் கார்டு இருந்தது.
அதனை கொண்டு அவரது முகவரியை கண்டுபிடித்து, ஈரோடு அரசு
மருத்துவமனை போலீசார் சென்று விசாரித்தனர். இறந்த நபர் குறித்து
நோட்டீஸ் அச்சிட்டு பல்வேறு இடங்களில் ஒட்டியும்,
விளம்பரப்படுத்தியும் பார்த்தனர். ஆனால் யாரும் முதியவரை தேடி
வரவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
