ADDED : ஆக 04, 2025 08:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: -சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகில், நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அந்த வழியே சென்றவர்கள் பார்த்து விட்டு சத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு, 65 வயது இருக்கும். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.