/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு மந்தம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 14, 2025 03:36 AM
ஈரோடு:கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்பவானி விவசாய பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி, தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டு-தோறும் ஆக.15ல் நன்செய் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது. பவானிசாகர் அணையில், ௯௬ அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளதால் முன்-கூட்டி திறக்க வலியுறுத்தினோம்.
ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணி நடப்பதால். ஆக.,15ல்தான் திறக்கப்படும் என்றும் நீர்வள ஆதாரத் துறை அதி-காரிகள்
தெரிவித்திருந்தனர்.
தற்போது அரச்சலுார், சென்னிமலை மற்றும் காங்கேயம் பகுதி கீழ்பவானி வாய்க்காலில் நடந்து வரும் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அணை நிரம்பவுள்ள நிலையில், இப்படி பணி நடந்தால், உபரிநீர் வீணாகி ஆற்றில் திறக்கப்படும் நிலை ஏற்படும். எனவே ஜூலை மாத இறுதிக்குள் சீரமைப்பு பணி-களை முடிக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் ஒன்றி-ணைந்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.