பசுமை வலை நீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
பசுமை வலை நீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2026 05:29 AM
பெருந்துறை; பசுமை வலை நீர் திட்டம் குறித்து முதன்மை ஆய்வு செய்ய, அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு, தமிழக அரசுக்கு வலியுறுத்தி-யுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பின் சார்பாக, கவன ஈர்ப்பு கருத்த-ரங்கம் நடந்தது.அறத்தமிழர் பேரியக்க தலைவர் விஜய் சீதா-ராமன் பேசினார். தொடர்ந்து பசுமை நீர் வலைப்-பின்னல் திட்டம் குறித்த விளக்கங்களை, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பெருந்-துறை முருகபூபதி பேசினார். அத்திக்கடவு திட்-டத்தின் தற்போதைய நிலை குறித்து அன்னுார் நடராஜ், தொரவலார் சம்பத், அத்திக்கடவு சுப்பு வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பேசினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெருந்துறை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன், அத்திக்கடவு திட்டம்-1ல் உள்ள குளம், குட்-டைகளுக்கு சரியான நீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். விடுபட்டு போன, 1,400 குளம், குட்-டைகளுக்கு நீர் நிரப்பும் அறிவிப்பை அரசு வெளி-யிட வேண்டும்.
பாண்டியாறு நீரை பவானி ஆற்றில் சேர்க்கும் திட்டம் குறித்து, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நல்ல உறுதியை பெற்றுத்தர வேண்டும். பசுமை வலை நீர் திட்டம் குறித்தும் முதன்மை ஆய்வுக்கு, தமிழக அரசு உடனடியாக எடுத்து முதற்கட்ட ஆய்வுக்காக அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், அரசை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேறற்றினர்.
