ADDED : செப் 13, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி, கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம்
சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரேபிஸ்
நோய் பரவலை தடுக்கும் நோக்கில், மாநகராட்சியில் அனைத்து
வார்டுகளிலும் தெருநாய்களுக்கு, தீவிர வெறிநாய் கடி தடுப்பூசி
செலுத்தும் முகாம் நடந்தது.
இதுகுறித்து அதிகாரிகள்
கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம்
அதிகமாக உள்ள இடங்களில், சிறப்பு மருத்துவ குழுக்கள் வாயிலாக நாய்களை
பிடித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது
பகுதிகளில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இந்த
மருத்துவ குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
