/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த வேன்
/
திம்பம் மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த வேன்
ADDED : செப் 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து வாகன உதிரி பாகங்கள் ஏற்றிய பிக்-அப் வாகனம், கோவைக்கு புறப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கங்கவாடி மனு ஓட்டினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று மதியம், ௩:௩௦ மணிக்கு ஆறாவது கொண்டை ஊசி வளைவில் வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் கவிழ்ந்து முன்பக்கம் தீப்பிடித்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் எட்டி குதித்து உயிர் தப்பினார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் மலைப்
பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.