ADDED : ஏப் 30, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் பிரபாகரன், 24, டிரைவர்; இவர் சென்னையில் இருந்து, நம்பியூரை நோக்கி, 140 வைக்கோல் பண்டல்களை, ஈச்சர் வேனில் ஏற்றிக்கொண்டு, கோபி அருகே மொடச்சூர் சாலையில், சேரன் நகர் என்ற இடத்தில் நள்ளிரவு 1:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஸ்டியரிங் பாக்ஸ் கட்டானதால், சாலையின் மத்தியில் இருந்த, சென்டர் மீடியன் மீது மோதியது. இந்த விபத்தில் காயமின்றி, டிரைவர் பிரபாகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று காலை 8:00 மணிக்கு விபத்தில் சிக்கிய ஈச்சர் வேன் அகற்றப்பட்டது.
