/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பாதையில்வேன் கவிழ்ந்து விபத்து
/
மலைப்பாதையில்வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : பிப் 13, 2025 01:10 AM
மலைப்பாதையில்வேன் கவிழ்ந்து விபத்து
சத்தியமங்கலம்:திம்பம் மலைப்பாதையில், ஈச்சர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நேற்று மதியம் தாளவாடியிலிருந்து, கரூரை நோக்கி மர லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. வேனை மைசூரை சேர்ந்த தாதாபீம், 40, ஓட்டினார். 13 வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது, நிலை தடுமாறி கவிழ்ந்தது.
டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வேன் சாலையில் கவிழ்ந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாகனங்கள் 2 கி.மீ..துாரம் நின்றன. போக்கு வரத்தை ஆசனுார் போலீசார் சீர்படுத்தினர். மாலை வரை வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வருவதே, விபத்துகளுக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.