/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் மோதிக் கொண்ட வேன்கள்
/
திம்பம் மலைப்பாதையில் மோதிக் கொண்ட வேன்கள்
ADDED : நவ 30, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை இரண்டு பிக்கப் வேன்கள், பாரம் ஏற்றிக்கொண்டு ஆசனுாரை நோக்கி சென்றன. ஐந்தாவது கொண்டை ஊசி வளைவை கடந்து சென்றபோது, ஒரு வேன் மீது மற்றொரு வேன் மோதிக்கொண்டது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் போக்குவரத்து மட்டும், ௧ மணி நேரம் பாதித்தது. காய்கறி ஏற்றிச்செல்லும் பிக்-அப் வேன்கள், மலைப்பாதையில் அதிவேகத்தில் போட்டி போட்டு செல்வது வழக்கமாக உள்ளது. தினமும் மலைப்பாதை வழியாக பலமுறை செல்வதால், நன்கு அனுபவம் பெற்று விட்ட இளம் டிரைவர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர். அவ்வாறு சென்றபோது விபத்து நேரிட்டதாக, பிற வாகன ஓட்டிகள் தெரி-வித்தனர்.

