தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காரில் இறந்து கிடந்த வி.ஏ.ஓ.,

காரில் இறந்து கிடந்த வி.ஏ.ஓ.,

காரில் இறந்து கிடந்த வி.ஏ.ஓ.,


ADDED : டிச 12, 2024 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: முத்துார் அருகே, காரில் இறந்து கிடந்த வி.ஏ.ஓ., உடல் மீட்கப்-பட்டது.திருப்பூர் மாவட்டம், முத்துார் அருகே சின்ன காங்கேயம்பாளை-யத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 47. இவர், திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அருகேயுள்ள, 16 வேலம்பாளையத்தில் கிராம நிர்-வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.இரண்டு நாட்களுக்கு முன், சின்ன காங்கேயம்பாளையத்திற்கு ஜெகநாதன் வந்துள்ளார். அப்போது, காரிலேயே அமர்ந்தவாறு துாங்கி விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில்

இருந்தவர்கள், சென்று பார்க்கும் போது ஜெகநாதன் காரில் இறந்து அழுகிய நிலையில் உடல் இருந்துள்ளது. வெள்ளகோவில் போலீசார், ஜெகநாதனின் சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, வெள்ள-கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us