ADDED : பிப் 17, 2026 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு; தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 10 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ஜான் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா திருத்-தங்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும், வருவாய் துறை அலு-வலர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்-டத்தை நிறைவேற்ற கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நம்பியூர் தாலுகா அலுவலகம் முன், நம்பியூர் வட்ட தலைவர் சுமதி தலைமையிலும், கோபி தாலுகா அலுவலகம் முன், கோபி வட்டத்-தலைவர் ஜெயந்தன் தலைமையிலும், 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

