/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 26 அடியானது
/
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 26 அடியானது
ADDED : அக் 24, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள வரட்டுப்பள்ளம் அணை, பர்கூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, ௧69 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணை மொத்த கொள்ளவான, 33.46 அடியில், 26 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது. கடந்த, ௧௦ நாட்களில், ௬ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

