/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கிராம மக்கள் முறையீடு
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கிராம மக்கள் முறையீடு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கிராம மக்கள் முறையீடு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கிராம மக்கள் முறையீடு
ADDED : ஜூலை 15, 2025 01:26 AM
ஈரோடு, ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை தாலுகா பகுதிகளை சேர்ந்த பெரலிமேடு, சேடர்பாளையம் கரைப்பகுதி, வி.மேட்டுப்பாளையம், செம்படாபாளையம், வெள்ளோடு, கனகபுரம் பகுதி கிராம மக்கள் தலா, 50க்கும் மேற்பட்டோர் குழுவாக வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர்.
மனுவில் கூறியிருப்பதாவது: தாங்கள் குறிப்பிட்ட பகுதியில், 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருவதாகவும், கூலி வேலை செய்து வரும் தங்களுக்கு சொந்தமான நிலம், வீடு இல்லை. நிலம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாததால், இலவச வீட்டுமனை வழக்கி, இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இவர்களில் பலர், அருந்ததியர் சமூகம் உட்பட சில சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் தங்களுக்கு முன்னுரிமை வழங்கி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.