/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது
/
ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது
ADDED : டிச 21, 2024 01:34 AM
ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது
ஈரோடு, டிச. 21-
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 4வது பிளாட்பார்மில் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது. மாலை, 4:30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையிலானவர்கள், ரயில் முன் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் பற்றி அவதுாறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உருவப்படங்களை கிழித்து வீசினர். சூரம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட, 25 பேரை கைது செய்தனர்.
* அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.